தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 12, 2020, 4:43 AM IST

ETV Bharat / city

மகா சிவராத்திரி நிகழ்ச்சியை நடத்த ஈஷா யோகா மையத்திற்கு அனுமதி!

சென்னை: ஈஷா யோகா மையம் நடத்தும் மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு உரிய ஆய்வுக்கு பிறகு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்
தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் வெற்றி செல்வன் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், "கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையம் கடந்த 1994ம் ஆண்டு முதல் இதுவரை 4 லட்சத்து 27 ஆயிரத்து 700 சதுர அடி நிலப்பரப்பில் வெள்ளியங்கிரி மலைப்பகுதியை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டியுள்ளது.

இதனால், மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வனப்பகுதியில் நடத்தப்படும் விழாவில் காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு, கழிவு நீர் மேலாண்மை விதிகள் பின்பற்றப்படுவது இல்லை.

விதிமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்படும் மகா சிவராத்திரி விழா நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா அமர்வு, மாவட்ட நீர்வாகம், காவல்துறை, வனத்துறை ஆகியவற்றிடமிருந்து மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு உரிய அனுமதியை பெற்று நடத்த வேண்டும்.

சட்ட விதிகளுக்கு உட்பட்டு மாவட்ட நில்வாகம் அனுமதி தர வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் சிவராத்திரி நிகழ்ச்சி நடைபெறுகிறதா? என மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஆய்வு செய்ய வேண்டும்.

விதிமுறைகள் மீறப்படும் பட்சத்தில் ஈஷா நிர்வாகத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்கலாம். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி ஒலி அளவுகள் கடைபிடிக்கப்படுகிறதா? என கண்காணிக்கப்பட வேண்டும்.

மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைக்கு உட்பட்டு கழிவு நீர் மேலாண்மையை கடைபிடிக்க ஈஷா நிர்வாகத்துக்கு மாவட்ட நில்வாகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details