தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மக்களுக்கு எந்த பொருள்களையும் தாங்களாகவே யாரும் தரக்கூடாது - அரசு.! - Do not distribute cooked food, vegetables, fruits or groceries to the public- govt warnS to NGO'S

சென்னை: மாநகர எல்லைக்குள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை என்.ஜி.ஒ க்கள், தனியார் என யாரும் மக்களுக்கு கொடுத்தல் கூடாது மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு எந்த பொருட்களையும் தரக்கூடாது - தமிழ்நாடு அரசு.!
தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு எந்த பொருட்களையும் தரக்கூடாது - தமிழ்நாடு அரசு.!

By

Published : Apr 12, 2020, 10:35 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக என்.ஜி.ஓ க்கள், தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் உள்ளிட்டவர்கள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சமைத்த உணவு, காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள் உள்பட எந்த பொருள்களையும் அவர்களாகவே விநியோகிக்கக்கூடாது.

சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், மாநகர ஆணையர்கள் உள்ளிட்டவர்களிடம் கொடுத்து விநியோகம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை வழங்க விரும்புவோர் அவற்றை சம்பந்தப்பட்ட மாநகர எல்லைக்குள் இருக்கும் மண்டல அலுவலர்கள் அல்லது மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதனை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பாதுகாப்பான முறையில் மக்களுக்கு கொண்டு செல்வார்கள். அதை விடுத்து தனிப்பட்ட முறையில் யாரேனும் உணவு, மளிகை சாமான், காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை கொடுப்பது தெரிந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:

நரிக்குறவர் இன மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ஆசிரியர்கள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details