தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகளைச் சுருக்கமாக காணலாம்.

newstoday
newstoday

By

Published : Jan 12, 2021, 7:23 AM IST

2ஆவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா; பிரதமர் மோடி இன்று உரை!

ஜனவரி 12ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும், 2வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் இறுதிநாள் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில், தேசியளவில் வெற்றி பெற்ற 3 பேர், தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வர். மக்களவை சபாநாயகர், மத்திய கல்வி அமைச்சர் மற்றும் மத்திய இளைஞர் விவாகரம் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் ஆகியோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிரதமர் மோடி

கோவிஷீல்டு தடுப்பூசி விநியோகத்தை தொடங்கும் சீரம் நிறுவனம்!

நாடு முழுவதும் வரும் 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ள நிலையில் கோவிஷீல்டு மருந்து விநியோகம் இன்று(ஜன.12) முதல் புனே நகரில் இருந்து தொடங்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை சீரம் நிறுவனம் மேற்கொண்டுள்ளனது.

கோவிஷீல்டு மருந்துகளுக்கான கொள்முதல் ஆணையை மத்திய அரசிடம் இருந்து சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 மருந்துகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றுள்ளது. வரும் 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி

இந்திய கடற்படையின் மிகப்பெரிய பாதுகாப்புப் பயிற்சி!

இந்திய கடற்படையின் மிகப் பெரிய கடல் கண்காணிப்பு பாதுகாப்புப் பயிற்சி இன்று தொடங்கவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "கடந்த 2019ஆம் ஆண்டு, முதல் முறையாக 'கடல் கண்காணிப்பு' என்ற பெயரில் இந்திய கடற்படை மிகப்பெரிய பாதுகாப்பு பயிற்சியில் ஈடுபட்டது. இந்தப் பயிற்சியை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இந்தப் பயிற்சி 2ஆவது முறையாக ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை

வேளாண் சட்டங்கள் தொடர்பான மனுக்கள்; உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு!

டெல்லியில் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக 40 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று, வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள், விவசாயிகள் போராட்டத்துக்கு தடை கோரும் மனுக்களும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்றம்

வழக்கை விசாரித்த நீதிபதி, "வேளாண் திருத்தச் சட்டங்களை நிறைவேற்றித் தீருவோம் என மத்திய அரசு நினைப்பது ஏன்? டெல்லியில் நடைபெறும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன' என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

போராட்டம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. முடிவுக்கு கொண்டு வருவது அனைவரின் கடமையாகும். வேளாண் சட்டங்கள் தொடர்பாக, விவசாயிகளுடன் பேசக் குழு அமைக்கவும் நாங்கள் தயாராகவுள்ளோம். அந்த குழுவிடம், விவசாயிகள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கட்டும். குழுவின் பரிந்துரையை ஆராய்ந்து நாம் முடிவுகளை எடுக்கலாம். மத்திய அரசு வேளாண் திருத்தச் சட்டங்களை நிறுத்தி வைக்காவிட்டால், உச்ச நீதிமன்றமே நிறுத்தி வைக்க நேரிடும்" எனத் தெரிவித்தார்

மேலும், இன்று உச்ச நீதிமன்றத்தில் வேளாண் திருத்தச் சட்டங்கள் தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. சட்டங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஸ்டீல் விலை உயர்வைக் கண்டித்து கட்டுமானப் பணிகள் இன்று நிறுத்தம்!

ஸ்டீல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, அரசுப் பணிகளை இன்று (ஜன., 12) ஒரு நாள் நிறுத்துவதாக, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர். கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் உதயகுமார், செயலாளர் சந்திரபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மூன்று மாதங்களுக்குமுன், ஒரு டன் ஸ்டீல், 36 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இப்போது, 70 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. அடிக்கடி விலை உயர்வதால், கட்டுமானத் தொழில் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அரசு மற்றும் தனியார் துறைகளில் கட்டுமானப் பணி எடுத்தவர்கள், பெரும் நஷ்டத்தை சந்தித்து மீள முடியாமல் தவிக்கின்றனர். சிமென்ட் மற்றும் ஸ்டீல் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து சிண்டிகேட் அமைத்து, விலை ஏற்றம் செய்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும். விலையேற்றத்தைக் கண்டித்து, இன்று (12ஆம் தேதி) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details