தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

செப்டம்பர் - 28 முக்கியத் தகவல்கள் #EtvBharatNewsToday

இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

By

Published : Sep 28, 2021, 6:40 AM IST

EtvBharatNewsToday
EtvBharatNewsToday

சேலம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்

கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை சேலத்திலுள்ள பள்ளி ஒன்றில் ஆய்வு நடத்துகிறார்.

ஸ்டாலின்

காங்கிரசில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்

குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி, முன்னாள் ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்கள்.

காங்கிரஸ்

மதுரையில் உழவர் குறைதீர் கூட்டம்

மதுரையில் கரோனா பாதிப்பு காரணமாக உழவர் குறைதீர் கூட்டம் காணொலி வாயிலாக நடந்துவந்த நிலையில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

உழவர் குறைதீர் கூட்டம்

ஏலத்திற்குச் சென்ற நான்கு சக்கர வாகனங்கள்

விழுப்புரத்தில் மது விலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, அரசுடமையாக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் இன்று காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் ஏலம்விடப்படுகிறது.

கார்கள் ஏலம்

மழை பெய்யக்கூடிய பகுதிகள்

தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், தென்மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

ABOUT THE AUTHOR

...view details