தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

செப்டம்பர் - 27 முக்கியத் தகவல்கள் #EtvBharatNewsToday - மநீம கட்சி பரப்புரையை தொடங்கும் கமல்

இன்றைய முக்கிய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள்

By

Published : Sep 27, 2021, 6:41 AM IST

உழவர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம்

ஒன்றிய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் உழவர்கள் ஒன்பது மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் நிலையில் இன்று அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்விதமாக நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

உழவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்தியர்கள் கனடா செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்

கரோனா காரணமாக இந்தியாவிலிருந்து அனைத்து நேரடி வணிக மற்றும் பயணிகள் விமானம் வருவதற்கு செப்டம்பர் 26ஆம் தேதிவரை தடைவிதிக்கப்பட்டது. நேற்றுடன் அந்தத் தடை முடிவடைந்துள்ள நிலையில் இன்றுமுதல் ஏர் கனடா விமான நிறுவனம் இந்தியாவிலிருந்து தனது விமான சேவைகளைத் தொடங்குகிறது.

விமான சேவை

கரோனா தடுப்பூசி முகாம் கிடையாது

தமிழ்நாடு முழுவதும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று (செப். 26) நடைபெற்று முடிந்த நிலையில் இன்று ஒருநாள் தடுப்பூசி முகாம் நடைபெறாது எனச் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி முகாம்

மநீம கட்சி பரப்புரையைத் தொடங்கும் கமல்

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்றுமுதல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

மநீம

தமிழ்நாட்டில் மழை

தென்மேற்குப் பருவமழை காரணமாக இன்று தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென்காசி, குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

ABOUT THE AUTHOR

...view details