தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - செய்திகளின் தொகுப்பு

மே 19ஆம் தேதியின் நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பைக் காணலாம்.

NEWS TODAY on may 19 2021
NEWS TODAY on may 19 2021

By

Published : May 19, 2021, 8:14 AM IST

சென்னை:இன்றைய நிகழ்வுகள் செய்திகளின் தொகுப்பை காணலாம்.

  • மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்கும் ஸ்டெர்லைட்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, அதன் உற்பத்தி இன்று முதல் மீண்டும் தொடங்கியது.

  • எழுத்தாளர் கி.ரா உடல் இன்று தகனம்!

வயதுமூப்பு காரணமாக நேற்று முன்தினம் (மே 17) மறைந்த எழுத்தாளர் கி. ராஜ நாராயணனின் உடல், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரில் இன்று தகனம் செய்யப்படுகிறது.

  • தொண்டு நிறுவனங்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

தமிழ்நாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

  • புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடும் பிரதமர்!

டவ்-தே புயலால் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை இன்று பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பார்வையிடுகிறார்.

  • ஒடிசாவில் முழு ஊரடங்கு அமல்!

ஒடிசா மாநிலத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details