திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.
கமல்ஹாசன் இன்று 2ஆம் கட்ட தேர்தல் பரப்புரை
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது 2ஆம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கவுள்ளார்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் வியூகம் வகுக்கும் அமித் ஷா
மேற்கு வங்க பாஜக நிர்வாகிகளுடன், வரும் சட்டப்பேரவைக்கான தேர்தல் வியூகங்களை வகுக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கூட்டத்தை நடத்துகிறார்.
உள் துறை அமைச்சர் அமித் ஷா சபரிமலையில் 5000 பக்தர்களுக்கு அனுமதி
சபரிமலையில் இன்று நடை திறக்கப்படுவதால், 5000 பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து - பாக்., இடையேயான 2ஆவது டி20
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது.
நியூசிலாந்து - பாகிஸ்தான்