- ஜூலை மாதத்திலும் விலையில்லா ரேஷன் பொருள்கள்
ஜூலை 31 வரையிலான ஊரடங்கு நீட்டிப்பை கருத்தில்கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழங்கப்பட்டது போல் ஜூலையிலும் விலையில்லாமல் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் எனவும், வரும் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளுக்குச் சென்று இலவசப் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் குறைகளை தீர்க்க ஏற்பாடு
பாஸ்போர்ட் தொடர்பான குறைகளை ஆன்லைன் மூலம் நிவர்த்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "ஸ்கைப்" செயலி மூலம் விண்ணப்பதாரர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 7-ம் தேதி ஸ்கைப் மூலம் முதல் தொடர்பு கொண்டு விண்ணப்பதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி குறைதீர் அலுவலரிடம் தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்து நிவர்த்திப் பெறலாம். அலுவலக வேலை நாள்களில் தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தர்ம சக்கர உபதேச தினம் - பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடல்
தர்மசக்கர உபதேச தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடுகிறார். அப்போது புத்தரின் நெறிகள், போதனைகள் பற்றி பேசவுள்ளார்.
- லேசான மழைக்கு வாய்ப்பு