தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

76 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை குடிநீர் தேவைக்காக புதிய நீர்த்தேக்கம் - Chennai Water Source

சென்னை: 1944ஆம் ஆண்டுக்கு பின், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கன்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரியை இணைத்து புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

new-water-source-for-chennai-city-after-76-years
new-water-source-for-chennai-city-after-76-years

By

Published : Nov 21, 2020, 10:53 PM IST

தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர அரசு, கண்டலேறு அணையிலிருந்து சென்னைக் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை வழங்கவேண்டும். அந்நீரை சேமித்து வைக்கக் கூடிய பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கனஅடி மட்டும்தான். ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய நீர்த்தேக்கத்தை அமைக்க தமிழ்நாடு அரசு சார்பாக முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் அமைக்க 2012ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நீர்தேக்கத்திற்காக மொத்தம் 1,485.16 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டது. இதில் 8.65 ஏக்கர் பட்டா நிலம் மற்றும் 54.59 ஏக்கர் வனத்துறை நிலமும் அடங்கும்.

2013ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் இதற்கான ஆரம்பப் பணிகள் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்காக பாலவாக்கம் சத்தியவேடு சாலையில் ஒரு பகுதியை சாலையாக (3.60 கிலோமீட்டர்கள்) புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கம் அமைக்க 7,150 மீட்டர் நீளத்திற்கு மண் கரை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. நீர்த்தேக்கத்தில் 500 மில்லியன் கனஅடி நீரை ஆயிரத்து 500 ஏக்கரில் 2 முறையில் ஆயிரம் மில்லியன் கனஅடி நீரை சேமிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

76 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை குடிநீர் தேவைக்காக புதிய நீர்த்தேக்கம்
சென்னை குடிநீருக்காக உள்வாங்கி கோபுரம் அமைக்கப்பட்டு நாளொன்றுக்கு 66 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீர்த்தேக்கம் அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் வருவதற்கு வழிவகுக்கும். இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வட்டியுடன் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலங்களில் கண்ணன்கோட்டை,தேர்வாய்கண்டிகை, கரடி புத்தூர், செஞ்சி நகரம் மற்றும் கிராமங்களில் நில பரப்பில் பெரும் மழை நீர் வடிகால் அமைந்துள்ளது. இந்த நீர்தேக்கத்திற்கு 420 கோடி மதிப்பீட்டில் முழுவதுமாக பணி நிறைவு செய்யப்பட்டு இன்று காணொலிக் காட்சி மூலமாக அமித்ஷா திறந்து வைத்தார்.

சென்னையின் குடிநீர் பயன்பாட்டிற்காக கடைசியாக 1944-ஆம் ஆண்டு பூண்டியில் சத்யமூர்த்தி நீர் தேக்கம் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், 76 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வாரிசு அரசியலை ஒழிப்போம்' - அமித் ஷா!

ABOUT THE AUTHOR

...view details