தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதைக் கண்காணிப்பதற்காக, 2011 மே மாதம் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை உருவாக்கப்பட்டது. மாவட்ட அளவில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும், திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் செயல் திறன்கள் குறித்து கள ஆய்வு செய்ய 2011ஆம் ஆண்டு வாங்கப்பட்ட வாகனங்களில், அடிக்கடி பழுது ஏற்படுவதால், துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் ரூபாய் 44,16,312/- செலவில் ஆறு புதிய வாகனங்கள் வாங்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
’சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைக்கு 6 புதிய வாகனங்கள்’ - சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
சென்னை: தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அலுவலர்கள், அலுவலக பயன்பாட்டிற்காக 44,16,312 ரூபாய் செலவில் ஆறு புதிய வாகனங்கள் வாங்க சட்டப்பேரவையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
assembly