தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஏஒய்.4.2வகை கரோனா அச்சுறுத்தல்... பள்ளிகள் மூடல்... - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளிகள் திறக்கப்பட்டதன் காரணமாக மாணவர்களிடையே கரோனா தொற்று பரவல் அதிகரித்துவருகிறது. இதனால், பள்ளிகளை மூட மாநில அரசுகள் திட்டமிட்டுவருகின்றன.

அமைச்சர் அன்பில் மகேஷ்

By

Published : Nov 17, 2021, 5:40 PM IST

சென்னை: கரோனா தொற்றின் 2ஆம் அலை குறைந்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மாணவர்களிடையே கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், 2 மாதங்களிலேயே காங்ரா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 426 மாணவர்கள், 49 பணியாளர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏஒய்.4.2(AY.4.2) கரோனா வைரஸ்

இதில், பல மாணவர்களுக்கு உருமாற்றமடைந்த ஏஒய்.4.2(AY.4.2) கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக, கூறப்படுகிறது. இதுஒருபுறமிருக்க மத்திய பிரதேச மாநிலத்தில் உருமாற்றமடைந்த ஏஒய்.4.2(AY.4.2) என்ற கரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது.

இதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவிலும், பெங்களூருவிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது. ஏஒய்.4.2 வைரஸ், கரோனாவைவிட 6 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இதனை கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பில் மாநில அரசுகள் மறுபரிசீலனையில் ஈடுபடலாம் என்று கூறப்படுகின்றன. கர்நாடக மாநில எல்லைகளில் சோதனை முகாம் அமைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துவருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் எனக் கூறப்படுகிறது. எனவே பள்ளிகள் மீண்டும் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:COVID-19 vaccine: தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு ஆபத்து அதிகம்!

ABOUT THE AUTHOR

...view details