தாம்பரம்-செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதையின் ஒரு பகுதியாக கூடுவாஞ்சேரி - சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது புதிய ரயில்வே வழித்தடத்தை பெங்களூருவிலுள்ள தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் செப்டம்பர் 29 அன்று ஆய்வு நடத்தவுள்ளார்.
கூடுவாஞ்சேரி - சிங்கப்பெருமாள் கோயில் இடையே அதிவேக ரயில்! - new track trial between guduvanchery sp koil
சென்னை: கூடுவாஞ்சேரி- சிங்கப்பெருமாள் கோயில் இடையே அதிவேக ரயிலுக்கான சோதனை ஓட்டம் நாளை (செப். 29) நடைபெறும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
new track trial between guduvanchery sp koil
மேலும், ரயில் சோதனை ஓட்டத்தையும் ஆணையர் ஆய்வு செய்யவுள்ளார். இந்த சோதனை ஓட்டம் காலை 09.00 மணி முதல் மாலை 04.45 மணிவரை நடைபெறவுள்ளது. கூடுவாஞ்சேரி- சிங்கப்பெருமாள் ரயில் நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் ரயில் தண்டவாளங்கள் அருகே நடக்கவோ அல்லது ரயில் பாதையை கடக்கவோ வேண்டாம் என தென்னக ரயில்வே சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.