அதிநவீன சைபர் ஆய்வகம் அமைப்பது குறித்து அலுவலர்கள் கூறுகையில், தொழில்நுட்பம் போல் ஆன்லைன் குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து துணை காவல் ஆணையர் அலுவலகத்திலும் சைபர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், சென்னையில் அதிநவீன தொழிற்நுட்ப வசதிகள் கொண்ட ஏழு அடுக்கு காவல் கட்டுப்பாட்டு அறை கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தக் கட்டடம் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் எதிரில் உள்ள இடத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தக் கட்டடத்தில் அலுவலர்களுக்கென தனி அலுவலகம் இல்லாமல், முதல் இரு தளங்களில் அதிநவீன சைபர் ஆய்வகம், மீதமுள்ள தளங்களில் சென்னை முழுவதும் உள்ள போக்குவரத்தை நேரடியாக கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையும் அமைய உள்ளது.