தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆடு, மாடு, கோழிகளை துன்புறுத்தாமல் கொண்டு செல்ல அறிவுறுத்தல்! - ஆடு, மாடு, கோழிகளை துன்புறுத்தாமல் கொண்டு செல்ல அறிவுறுத்தல்

சென்னை: இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் ஆடு, மாடு மற்றும் கோழிகள் துன்புறுத்தப்படாமல் எடுத்துச் செல்லப்படுவதை உறுதி செய்ய விதிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

high court
high court

By

Published : Feb 8, 2021, 2:59 PM IST

இறைச்சிக்காக மாடுகள் மற்றும் எருமைகள் கொண்டு செல்லப்படும் போது, பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதால், வழியிலேயே அவை இறந்து விடுவதாகவும், அவற்றை துன்புறுத்தாமல் கொண்டு செல்வதை உறுதி செய்யும் வகையில், மிருகவதை தடைச் சட்ட விதிகளை பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி விலங்குகள் நல ஆர்வலர் தமிழ்ச்செல்வன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மாடுகள் மட்டுமல்லாமல் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் ஆடு, கோழி ஆகியவையும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதால், அதனை தடுக்கும் வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. மேலும், மனுவுக்கு 8 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: அரசின் வரவுகளை இ-செலான் மூலம் பெறும் நடைமுறை தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details