தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பயங்கரவாத அச்சுறுத்தல்; போலீசார் வாகனங்களில் பிரத்யேக கருவி - bomb blast

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள காவலர்களின் வாகனங்களில் அணு கதிர்வீச்சைக் கண்டறியும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

atomic radiation

By

Published : May 15, 2019, 12:52 PM IST

சென்னையில் மக்கள் பாதுகாப்புக்காக காவலர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக பயங்கரவாதிகள் அணு கதிர்வீச்சு மூலம் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால், இந்தக் கதிர்வீச்சு மூலம் நடக்கும் தாக்குதலை தடுக்க சென்னை போலீசாரின் ரோந்து வாகனங்களில் பிரத்யேக கருவிகள் பொருத்துவதற்கு காவல்துறை முடிவெடுத்துள்ளது. அதன்படி, சென்னையில் முதற்கட்டமாக 60 ரோந்து வாகனங்களில் அணு கதிர்வீச்சைக் கண்டறியும் பிரத்யேக கருவி பொருத்தப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட பகுதி வரை கதிர்வீச்சு பரவியிருந்தால் இந்த கருவியில் சிவப்பு நிற விளக்கு எரியும் என்றும், அதை வைத்து அந்த பகுதியில் கதிர்வீச்சு பரவியிருப்பதை கண்டுபிடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தக் கருவியை மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் வடிவமைத்துள்ளது. இந்த முயற்சி சிறப்பாக செயல்பட்டால், சென்னையில் உள்ள அனைத்து ரோந்து வாகனங்களிலும் பொருத்தப்படும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் குண்டுவெடிப்பு நிகழ வாய்ப்புள்ளது என்ற அச்சுறுத்தலால் இந்த பாதுகாப்பு நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details