சென்னை: இதுதொடர்பாக அரசுப்போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’சமீபகாலமாக பேருந்துகளில் பயணம் செய்யும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு 1,771 புதிய பேருந்துகளை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
இதில், டீசலில் இயங்கும் BS 6 ரக 3 விதமான பேருந்துகளை வாங்குவதற்காக இந்த டெண்டர் கோரப்பட்டு இருக்கின்றது. சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகத்திற்கு 402 பேருந்துகளும், விழுப்புரம் மண்டலத்திற்கு 347 பேருந்துகளும் வாங்கப்பட இருக்கின்றன.
சேலம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும், கோயம்புத்தூர் மண்டலத்திற்கு 115 பேருந்துகளும் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும், மதுரை மண்டலத்திற்கு 251 பேருந்துகளும் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
மேலும் 11 மீட்டர் நீளமும், 90 சென்டிமீட்டர் உயரத்தில் தரைத்தளமும் கொண்ட வகையில் பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:எம்பிபிஎஸ், பிடிஎஸ் இன்று முதல் சுற்றுக்கலந்தாய்வுக்கான விண்ணப்பதிவு தொடங்கியது