சென்னை உயர் நீதிமன்றத்தின் 75 அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் உள்ள நிலையில் தற்போது தலைமை நீதிபதியுடன் சேர்த்து 56 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் மூத்த நீதிபதி சிவஞானம், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவர் பணிமாற்றலாகி செல்லும்பட்சத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 55 ஆகக் குறையும்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நான்கு கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.