தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழில் வெளியானது புதிய கல்விக் கொள்கை!

புதிய கல்விக் கொள்கையை அந்தந்த மாநில மொழிகளின் மொழிப்பெயர்ப்பில் வெளியிடும்போது, தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது தமிழில் மொழிபெயர்ப்பு செய்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை
புதிய கல்விக் கொள்கை

By

Published : Apr 26, 2021, 5:33 PM IST

இந்தியாவில் நடைமுறையில் உள்ள 1986ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட பழமையான தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக, புதிய தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது. இக்கொள்கைக்கு பல மாநில அரசுகளும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், புதிய தேசியக் கல்வி கொள்கையை, அந்தந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்த்து மத்திய அரசு பதிவேற்றம் செய்துள்ளது. அதில், அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகள் அடங்கும்.

ஆனால், தமிழ் மொழி இடம்பெறவில்லை. இதனையடுத்து, புதிய கல்விக் கொள்கை மொழிப்பெயர்ப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது தமிழிலும் மொழி பெயர்த்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details