சென்னைதலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகளில் 325 போலீசார் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கட்டாயம் 'சபாரி' எனப்படும் புதிய சீருடை அணிய வேண்டும் என்று ஆணையிட்டதன் அடிப்படையில், ஆண் காவலர்களைப் போல பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள 87 பெண் காவலர்களுக்கும் சபாரி சீருடை வழங்கப்பட்டுள்ளது. இது அசெளகரியமாக உள்ளதாக பெண் காவலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பொதுவாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் பெண் காவலர்கள், வழக்கமான காக்கி சீருடை மற்றும் சீருடை அல்லாத கலர் உடையில் பணியில் ஈடுபடுவர். தற்போது பெண் காவலர்களுக்கு சென்னை பாதுகாப்பு பிரிவில் வழங்கப்பட்ட சபாரி சீருடை, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண்களுக்கும் வயதான பெண் காவலர்களுக்கும் அசௌகரியமாக உள்ளதால் முன்பு இருந்ததைப்போல், ஆடை அணிய அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.