நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2ஆம் அலை குறைந்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே மாணவர்களிடையே கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது.
அந்த வகையில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒரு மாதம் முடிந்த நிலையில், காங்ரா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 426 மாணவர்கள், 49 பணியாளர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், அக்டோபர் 31ஆம் முதல் பள்ளிகள் தொடர்ந்து மூடப்படும் என மாவட்டக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே மத்திய பிரதேச மாநிலத்தில் உருமாற்றமடைந்த ஏஒய்.4.2(AY.4.2) என்ற கரோனா வைரஸ் பரவியுள்ளது.