சென்னை:தமிழ்நாட்டில் முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக ஒரு வாரமாக டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் தீவிரன கனமழை பெய்துள்ளது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது வடமேற்கு திசையில் தமிழ்நாடு நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலிமை பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
ஏஒய்.4.2(AY.4.2) கரோனா வைரஸ்
இந்தநிலையில், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, இமாச்சல பிரதேச மாநிலங்களில் உருமாற்றமடைந்த ஏஒய்.4.2(AY.4.2) கரோனா வைரஸ் பரவிவருகிறது. இதனால் மழைக்காலங்களில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னையில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் 15க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் மற்ற மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்க மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னை மக்களே... கவனமாக இருங்க - அலர்ட் கொடுக்கும் தமிழ்நாடு வெதர்மேன்