தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் 990 பேருக்கு கரோனா தொற்று உறுதி - கரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 990 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்று
கரோனா தொற்று

By

Published : Nov 1, 2021, 10:11 PM IST

சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை இன்று (நவ.01) கரோனா குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 769 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் மேலும் புதிதாக 990 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 3 லட்சத்து 55 ஆயிரத்து 668 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 27 லட்சத்து 3 ஆயிரத்து 613 நபர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 11 ஆயிரத்து 309 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் ஆயிரத்து 153 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 56 ஆயிரத்து 168ஆக உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் 3 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 17 நோயாளிகள் என 20 நோயாளிகள் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 136ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தென் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை - இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details