சென்னை: தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 11) புதிதாக 2184 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 2184 பேருக்கு தொற்று உறுதி! - அமைச்சர் விஜயபாஸ்கர்
19:12 November 11
தமிழ்நாட்டில் மேலும் 2184 பேருக்கு தொற்று உறுதி!
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக 76 ஆயிரத்து 572 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், மேலும் 2,184 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 5 லட்சத்து 8 ஆயிரத்து 866 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் 7 லட்சத்து 50 ஆயிரத்து 409 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததை உறுதி செய்ய முடிந்தது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 18,655 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த மேலும் 2210 பேர், இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 20 ஆயிரத்து 339ஆக அதிகரித்துள்ளது. மேலும், சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனைகளில் 15 நோயாளிகளும் தனியார் மருத்துவமனைகளில் 13 நோயாளிகளும் என 28 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 415ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:
சென்னை - 2,06,588
கோயம்புத்தூர் - 45,685
செங்கல்பட்டு - 45,252
திருவள்ளூர் - 39,241
சேலம் - 28,484
காஞ்சிபுரம் - 26,452
கடலூர் - 23,664
மதுரை - 19,171
வேலூர் - 18,549
திருவண்ணாமலை - 18,104
தேனி - 16,399
தஞ்சாவூர் - 15,872
விருதுநகர் - 15,615
தூத்துக்குடி - 15,389
கன்னியாகுமரி - 15,313
ராணிப்பேட்டை - 15,194
திருநெல்வேலி - 14,500
விழுப்புரம் - 14,197
திருப்பூர் - 13,983
திருச்சிராப்பள்ளி - 12,919
ஈரோடு - 11,365
புதுக்கோட்டை - 10,868
கள்ளக்குறிச்சி - 10,457
திண்டுக்கல் - 9987
திருவாரூர் - 10,044
நாமக்கல் - 9701
தென்காசி - 7915
நாகப்பட்டினம் - 7110
திருப்பத்தூர் - 6934
நீலகிரி - 7013
கிருஷ்ணகிரி - 6949
ராமநாதபுரம் - 6094
சிவகங்கை - 6093
தருமபுரி - 5810
அரியலூர் - 4479
கரூர் - 4470
பெரம்பலூர் - 2214
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 925
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 982
ரயில் மூலம் வந்தவர்கள் - 428