சென்னை ராயப்பேட்டையில் உள்ள புது கல்லூரியில் பயிலும் மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
புது கல்லூரியிலும் வெடித்தது மாணவர்கள் போராட்டம் - மாணவர்கள் போராட்டம்
சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புது கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![புது கல்லூரியிலும் வெடித்தது மாணவர்கள் போராட்டம் protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5414720-863-5414720-1576670317951.jpg)
protest
ஆயிரத்திற்கும் மேலான மாணவர்கள் கூடிய இந்த போராட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. குடியுரிமை சட்டத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் எனவும், மத ரீதியாக மக்களை இச்சட்டம் பிரிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். எனவே, மத்திய அரசு இந்தச் சட்டத்தை திரும்பப் பெறும்வரை தங்களின் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் கூறினர்.
குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்
இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!