சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.12) தலைமைச் செயலகத்தில், உள்துறை சார்பில் 66 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 274 காவலர் குடியிருப்புகள், 11 காவல் நிலையங்கள், 3 காவல் துறை கட்டடங்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கான 18 குடியிருப்புகள் மற்றும் ஒரு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கட்டடம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கான 58 குடியிருப்புகள் மற்றும் ஒரு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையம் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்துவைத்தார்.
காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சமூகத்தில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டிடும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்கப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கடலூர் மாவட்டம் – சிதம்பரம், கோயம்புத்தூர் மாவட்டம் – கோவைபுதூர், திருப்பூர் மாவட்டம் – மங்களம், சென்னை மாவட்டம் – கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் 37 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 274 காவலர் குடியிருப்புகள் ஆகும்.
மேலும், மயிலாடுதுறை மாவட்டம் – தரங்கம்பாடியில் 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் உள்ளிட்ட மொத்தம் 66 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்துவைத்தார்.