சென்னை:தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் குறித்த சட்டதிருத்த மசோதாவினை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அதில் கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நின்றுகொண்டே வேலை செய்வதை தவிர்க்க இருக்கைகள் கட்டாயமாக்குவதற்கான சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மாநிலத்திலுள்ள கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அவர்களது வேலை நேரம் முழுவதும் நிற்பதால் பல்வேறு வகையான உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. அவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு இருக்கை வசதி அவசியமாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெரியார் பிறந்த நாள் இனி சமூக நீதி நாள் - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு