கோயம்புத்தூர்:இந்திய பட்டயக் கணக்காளர்கள் தென் மண்டல மாநாடு கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பட்டய கணக்காளர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், இணையதளம் வாயிலாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறீர்கள்
அப்போது மாநாட்டில் பேசிய அவர், "53ஆவது மண்டல கருத்தரங்கில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. தென்மண்டல கவுன்சில் வரலாற்றில் முதல் முறையாக 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வது சிறப்பு வாய்ந்தது.
மழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகள் உள்ளதால் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள முடியவில்லை, நிதித்துறை, கணக்கு தணிக்கையோடு உங்கள் பணி நின்றுவிடாது, நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறீர்கள்.
பொருளாதார பாதுகாப்பாளர்
பொருளாதாரத்தை வடிவமைப்பதில் பட்டய கணக்காளர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர். பொருளாதார குற்றப்பிரிவு ஊழல் தடுப்பு பிரிவில் நிதி நிறுவனங்கள் செய்யும் மோசடியைத் தடுக்க புதிய தணிக்கை பிரிவுவை தமிழ்நாடு அரசு தொடங்க உள்ளது.