தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘நாட்டிற்கு உருவம் கொடுத்தவர் நேரு’ - கே.எஸ். அழகிரி புகழாரம் - நாட்டிற்கு உருவம் கொடுத்தவர் நேரு

சென்னை: இந்திய நாட்டிக்கு உருவம் கொடுத்தவர் ஜவஹர்லால் நேரு என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

Nehru was the person who shaped the country says KS Alagiri

By

Published : Nov 14, 2019, 3:53 PM IST

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 130ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, ‘இந்தியாவுக்கு ஒரு வடிவத்தை கொடுத்து இந்தியர்களுக்கு பெருமை சேர்த்த அற்புதமான தலைவர் நேரு. காஷ்மீரை இந்தியாவோடு ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் இணைத்தார். அதேபோல் இந்தியாவின் வருமையை போக்க பொருளாதார கொள்கையை காந்திய தத்துவத்தின் அடிப்படையாக அமைத்து உலகத்திற்கு வழங்கினார்கள்.

கே.எஸ். அழகிரி பேட்டி
எந்த ஒரு வல்லரசு நாட்டுடனும் தன்னை இணைத்து கொள்ளவில்லை. இந்தியா என்றால் நேரு என்று சொல்லக்கூடிய அளவிற்கு அனைவராலும் நேசிக்கும் தலைவராக இருந்தார். உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த பின்பு தொகுதி பங்கீடு பற்றி திமுக உடன் பேசப்படும். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அநாகரீகமாக விமர்சிப்பவர்கள் அநாகரீகமானவர்கள்’ என்று கே.எஸ். அழகிரி கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details