சென்னை: லெஜண்ட் சரவணனின் பான் இந்தியா படமான 'தி லெஜண்ட்' திரைப்படம் ஐந்து வாரங்களை கடந்து ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. விளம்பரங்களில் தோன்றிய லெஜண்ட் சரவணன் திரைப்படத்தில் நடிக்கிறார் என்றவுடன் பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டன.
தி லெஜண்ட் திரைப்படத்தின் ஒடிடி உரிமை எவ்வளவு - OTT rights and satellite right
தி லெஜண்ட் திரைப்படத்தின் ஒடிடி உரிமை மற்றும் சேட்டிலைட் உரிமைக்கான பேச்சுவார்த்தை நிறைவடையும் தருவாயில் உள்ளது
![தி லெஜண்ட் திரைப்படத்தின் ஒடிடி உரிமை எவ்வளவு Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16235503-thumbnail-3x2-leg.jpg)
அவை அனைத்தையும் மீறி ரசிகர்களின் பாராட்டை லெஜண்ட் சரவணன் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் 45 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், தற்போது இந்த படத்தின் ஓடிடி வெளியீடு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு வியாபாரம் தொடங்கியுள்ளது. இதில் ஒடிடி உரிமைக்கான பேச்சுவார்த்தை நிறைவடையும் தருவாயில் உள்ளது. சேட்டிலைட் உரிமை 20 கோடி ரூபாய்க்கும், ஒடிடி உரிமை 25 கோடி ரூபாய்க்கும் விற்கப்படலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:வாழைத்தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் பறிமுதல்