தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு திடீர் நிறுத்தம்

reservation
reservation

By

Published : Oct 27, 2020, 4:40 PM IST

Updated : Oct 27, 2020, 5:16 PM IST

16:20 October 27

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின்கீழ் சேர்வதற்கான கலந்தாய்விற்கு விண்ணப்பப்பதிவு செய்வது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இளநிலை மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13, அக்டோபர் 14ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. அதன்  முடிவுகள் கடந்த 16ஆம் தேதி வெளியிடப்பட்டன. 

அதில் ஏழு லட்சத்து 71 ஆயிரத்து 500 மாணவர்கள் மருத்துவப்படிபில் சேர தகுதிப்பெற்றுள்ளனர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்களுக்கான கலந்தாய்வினை மருத்துவ கலந்தாய்வுக்குழு நடத்திவருகிறது. 

அவ்வாறு சேர விரும்பும் மாணவர்கள் ’https://mcc.nic.in/UGCounselling’ என்ற இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 15% இடங்கள் இதன் மூலம் நிரப்பப்படும்.  

மேலும், மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. 

அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்வதற்கான முதல் சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்க அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை கட்டணங்களைச் செலுத்தலாம் எனக் கலந்தாய்வு அட்டவணையை ஏற்கனவே மருத்துவக் கலந்தாய்வுக்குழு வெளியிட்டது. 

ஆனால், திட்டமிட்டப்படி மாணவர்கள் சேர்வதற்கான பதிவு இன்று தொடங்கப்படவில்லை. மேலும் கலந்தாய்வு தொடங்கும் தேதி, தகவல் கையேடு விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தாண்டு முதல்முறையாக அகில இந்திய மருத்துவக் கல்வி தொகுப்பு இடங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் 5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

ஆந்திரா, தெலங்கானாவிலிருந்து 15% இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் கலந்துகொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணவர் சேர்க்கைக்குழுவை தொடர்பு கொண்டபோது, மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் மேலும் சில திருத்தங்களுடன் தகவல் கையேடு வெளியிடப்படும் என்றும், அதற்கு ஏற்ப மருத்துவக் கலந்தாய்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:7.5% உள் ஒதுக்கீடு - மசோதாவிற்கு பதில் சட்டம் இயற்ற வல்லுநர்கள் யோசனை!

Last Updated : Oct 27, 2020, 5:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details