தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீட் - ஏ.கே.ராஜன் குழு நியமனம் தொடர்பான வழக்கு - பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - neet exam case

பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

By

Published : Jul 5, 2021, 12:46 PM IST

Updated : Jul 5, 2021, 2:02 PM IST

12:37 July 05

நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் தொடரப்பட்ட வழக்குகளில் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி பாஜக பொதுசெயலாளர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

யூகத்தின் அடிப்படையிலும், அரசியல் நோக்கதுடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் தங்களையும் இடையீட்டு மனுதாரர்களாக இணைக்க கோரி மருத்துவ மாணவர்கள், திமுக, மதிமுக, சிபிஎம், விசிக மற்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன்,  விளம்பரம் மற்றும் அரசியல் நோக்கத்திற்காக வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும், பொதுநலன் இல்லை என்றும் வாதிட்டார்.

தமிழ்நாடு அரசு தரப்பில், இந்த வழக்கில் வாதாட தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில் ஒன்றிய அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. 

இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு ஜூலை 8 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் முக்கியதுவம் கருதியும், மாணவர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோரிடம் தனிதனியாக வாதங்களை பெற வேண்டி இருப்பதன் காரணமாகவும் விசாரணையை ஜூலை 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க :நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதகம் இல்லாமல் முடிவு : உதயநிதி ஸ்டாலின்

Last Updated : Jul 5, 2021, 2:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details