சென்னை ஆவடியைச்சேர்ந்த ஜெய்குகன் கடந்த 30ஆம் தேதி ஐ.சி.எஃப் பகுதிக்கு தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு உதவி பொறியாளர் பாபு தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன், கார்த்திகேயன், வீரமணி ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஜெய்குகனிடமிருந்து கணக்கில் வராத 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
லஞ்சம் வாங்கிய பறக்கும் படை அதிகாரி பணியிடை நீக்கம்
சென்னை: வில்லிவாக்கம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாபு, காவல் உதவி ஆணையர் வாசுதேவன் உட்பட நான்கு பேர் லஞ்சம் வாங்கியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து வில்லிவாக்கம் காவல் நிலையத்திற்கு பறக்கும் படையினர் ஜெய்குகனை அழைத்து சென்று, 50ஆயிரம் பணத்தை திருப்பி தர வேண்டுமென்றால்தங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றுகூறியுள்ளனர்.இதைத்தொடர்ந்து, ஜெய்குகன் தன்னிடம் இருந்த இரண்டாயிரம் ரூபாயை லஞ்சம் கொடுத்து 50 ஆயிரம் ரூபாயை பெற்று சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெய்குகன் சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரகாஷிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில்தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாபு, காவல் உதவி ஆணையர் வாசுதேவன், காவலர்கள் கார்த்திகேயன் மற்றும் வீரமணி ஆகிய 4 பேரை பணியிட நீக்கம் செய்து அதிகாரி பிரகாஷ் உத்தரவிட்டார்.