தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் பயன் - சென்னை செய்திகள்

'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில், இதுவரை ஒரு லட்சத்து 17ஆயிரத்து 55 பேர் பயனடைந்துள்ளனர் என அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருந்துவம்
மக்களைத் தேடி மருந்துவம்

By

Published : Aug 22, 2021, 5:30 PM IST

சென்னை: 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை, 1 லட்சத்து 75 ஆயிரத்து 55 பேர் பயனடைந்துள்ளனர்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டம் முதற்கட்டமாக, 50 வட்டாரங்களிலுள்ள 1172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாநகராட்சிகளில் (சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி) தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டது.

'இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து ஊருக்கும் இத்திட்டம் வரும்'

இந்தத் திட்டம், படிப்படியாக இந்த ஆண்டு இறுதிக்குள், மாநிலத்தின் பிற கிராம மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் மக்களைச் சென்றடையும் வகையில் விரிவுபடுத்தப்படும்.

இதன்மூலம் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர் 79,040 நபர்களுக்கும், நீரிழிவு நோய் உள்ளவர்கள் 50,547 நபர்களுக்கும், உயர் ரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் 34,951 நபர்களுக்கும் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 5,223 நபர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சையும்; 5,268 நபர்களுக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர்த்து 24 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தினால் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை மொத்தம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 55 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details