தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வீடுகளுக்கு காஸ் விநியோகம் செய்ய இயற்கை எரிவாயு நிலையம்; முதலமைச்சர் திறந்து வைத்தார் - இயற்கை எரிவாயு நிலைய

ராணிப்பேட்டை மாந்தாங்கல் கிராமத்தில் திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் விரைவில் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு
தமிழ்நாட்டில் விரைவில் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு

By

Published : Oct 11, 2022, 3:53 PM IST

வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு, “AG&P பிரதம்” நிறுவனம் ராணிப்பேட்டை மாவட்டம், மாந்தாவாகல் கிராமத்தில் அமைத்துள்ள முதலாவது திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) நிலையத்தை மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக்காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

7 நிறுவனங்களுக்கு அங்கீகாரம்

ஒன்றிய அரசு, தமிழ்நாட்டில் நகர இயற்கை எரிவாயு விநியோகத்தினை, குழாய்கள் மூலம் வழங்குவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அங்கீகாரத்தை, 7 நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் இராமநாதபுரம், ஆகிய 6 மாவட்டங்களுக்கு, மேற்படி உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அங்கீகாரம் AG&P பிரதம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எரிவாயு நிலையம் 30 கோடி ரூபாய் செலவில் 1.2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் 222 பகிர்மான நிலையங்கள் மற்றும் 7 லட்சம் வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் பணியினை 8 வருடங்களில் இந்நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது, AG&P பிரதம் நிறுவனம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாந்தாங்கல் கிராமத்தில், தமிழ்நாட்டின் முதலாவது திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை அமைத்துள்ளது.

இந்த எரிவாயு நிலையம் 30 கோடி ரூபாய் செலவில் 1.2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் இரண்டு 56,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு கிடங்கு, ஆவியாக்கி இயந்திரம் மற்றும் உயர் அழுத்த பம்ப் அமைத்துள்ளது.

30,000 வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு

இதன்மூலம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 70 பகிர்மான நிலையங்களுக்கும் மற்றும் 30,000 வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு AG&P நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ளது.

இதையும் படிங்க:புதிய பேருந்துகள் வாங்க டெண்டர்

ABOUT THE AUTHOR

...view details