உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா நோய்க் கிருமி இந்தியாவிலும் தீவிரமடைந்துவருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இச்சூழலில் கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியில் வேப்பிலை, மஞ்சள் கலந்த கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றது.
இதனை அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கண்ணன் தொடங்கி வைத்தார். அப்போது இப்பணியில் காவல் துறையினருடன் அதிமுகவினரும் ஈடுபட்டனர். இதையடுத்து அம்பத்தூர் மண்டலம் ஏழுக்கு உள்பட்ட 83ஆவது வார்டு கொரட்டுர் அக்ரஹாரம் பகுதியில் சுமார் 50 கிலோ வேப்பிலை, 50 கிலோ மஞ்சள் ஆகியவை கொண்டு 26,000 லிட்டர் கிருமி நாசினி சுற்றுவட்டாரத்தில் தெளிக்கப்பட்டது.