தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நாளை தேசிய வாக்காளர் தினம் - உறுதிமொழி ஏற்பு - வாக்காளர் தினம்

சென்னை: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

day
day

By

Published : Jan 24, 2020, 1:47 PM IST

தேசிய வாக்காளர் நாள் நாளை கடைப்பிடிக்கப்படுவதையொட்டி சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் அனைத்து மாநகராட்சி அலுவலர்களும் வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர்.

மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும், அல்லது எந்தவொரு தூண்டுதலின்றியும் வாக்களிப்போம் என்று உறுதிமொழிகிறோம் என ஆணையர் பிரகாஷ் சொல்ல அனைவரும் அதனை வழிமொழிந்து ஏற்றுக்கொண்டனர்.

இதையும் படிங்க: ஊடகவியலாளர்களுக்கு தபால் ஓட்டு - சத்ய பிரதா சாகு விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details