தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நிவர் புயல்: மீட்புப் பணிகளுக்கு தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை! - தேசிய பேரிடர் மீட்பு படை

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது.

National Disaster Rescue Force
National Disaster Rescue Force

By

Published : Nov 26, 2020, 3:45 AM IST

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை தேசிய பேரிடர் மீட்பு படை எடுத்தது. நவீன உபகரணங்கள் மற்றும் தொலைதொடர்பு சாதனங்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வரும் தேசிய பேரிடர் மீட்பு படை, உள்ளூர் நிர்வாகங்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படக் கூடிய சாத்தியமுள்ள பகுதிகளுக்கு, 25 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், கடலூரில் 6, விழுப்புரத்தில் 3, சென்னை மற்றும் செங்கல்பட்டில் தலா 2, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் தலா ஒன்று என 15 குழுக்கள் தமிழகத்தில் உள்ளன.

புதுச்சேரிக்கு மூன்று குழுக்களும், காரைக்காலுக்கு ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்துக்கு 3 குழுக்களும், சித்தூர் மாவட்டத்திற்கு ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குநர் சத்ய நாராயண் பிரதான் நேரடியாக நிலைமையை கண்காணித்து வருகிறார். மாநில நிர்வாகிகளுடன் தேசிய பேரிடர் மீட்பு படை தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. 24 மணி நேரமும் செயல்படும் ஒரு கட்டுப்பாட்டு அறையும் நிலைமையை கண்காணித்து வருகிறது.

இதையும் படிங்க:உயிரிழந்த பெண் காவலருக்கு சக காவலர்கள் இறுதி வணக்கம்!

ABOUT THE AUTHOR

...view details