சென்னை: மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ பெஞ்சமின் இன்று வாக்களிக்கச் சென்ற இடத்தில் ரகளையில் ஈடுபட்டு, என்னைப் பார்த்தால் பூணூல் அணிந்தவன் போல் தெரிகிறதா என கேட்டதற்கு பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பூணூல் குறித்த அமைச்சர் பெஞ்சமின் பேச்சு - கடுப்பான நாராயணன் திருப்பதி - அமைச்சர் பெஞ்சமின்
பூணூல் போட்டிருந்தால் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்று யார் சொன்னது? பூணூல் பிடித்த கை தேவையெனில் துப்பாக்கியையும் பிடிக்கும். வாஞ்சிநாதனை தெரிந்து கொள்ளுங்கள் என நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பூணூல் போட்டிருந்தால் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்று யார் சொன்னது? பூணூல் பிடித்த கை தேவையெனில் துப்பாக்கியையும் பிடிக்கும். வாஞ்சிநாதனை தெரிந்து கொள்ளுங்கள். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் இப்படி கூற மாட்டார்கள். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காண்பிக்க சொன்னது யேசுபிரான் என்பதை நினைவில் கொள்ளுங்கள் பெஞ்சமின் அவர்களே. பொது இடத்தில் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் பேசுகிற பேச்சா இது? ஜெயலலிதா இருந்திருந்தால் ??????? என குறிப்பிட்டுள்ளார்.