தமிழ்நாட்டில் மற்ற கட்சிகளுக்கு இல்லாத ஒரு அரசியல் பாரம்பரியம் திமுக, அதிமுகவுக்கு உண்டு. இக்கட்சிகள் தொண்டு செய்த பழுத்த பழமான பெரியார் என்னும் விருட்சத்தின் விதைகள்.
தற்போது நமக்குள் ஒரு கேள்வி எழுலாம்.!
பெரியார்
யார் அந்த பெரியார்? அவர் விட்டு சென்ற பணிகள் என்ன?
சாதிய பெருமைகளே சரித்திரம் என்று நம்ப வைத்து நம்மை அடக்கி ஆண்ட கூட்டம் ஒரு பக்கம்.
அக்கூட்டத்தை பார்க்கவே துணிவில்லாமல், ஒடுங்கி, அடங்கி வாழ்ந்த கூட்டம் மறுபக்கம்.
அக்காலக் கட்டத்தில் தான் பெரியார் என்னும் ஆதவன் வெகுண்டெழுந்தார்.
அக்கூட்டத்தை அடக்கி ஆண்டார் பெரியார்.
அக்கூட்டத்தின் ஆட்டத்தை ஒடுக்கினார் பெரியார்.
அக்கூட்டத்தை சிதறுண்ட செய்தார் பெரியார்.
அக்கூட்டத்தை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தினார் பெரியார்.
தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக வாழும், பெரியார் என்னும் ஆலமரத்தில் இருந்து பிரிந்த விழுந்த விதைகள் தான் திமுகவும், அதிமுகவும்.
பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என ஒன்றுப்பட்ட திமுக வெற்றிகளை குவித்து ஆட்சியை பிடித்த சமயம். இரண்டே ஆண்டில் பேரறிஞர் அண்ணா என்னும் ஆதவன் அஸ்தமனமானது.
மூன்றே ஆண்டுகளில் எம்ஜிஆர் என்னும் பேரோளி புதுக்கட்சியை தொடங்கியது. திமுகவை வலுவிழக்க தேசிய கட்சிகள் காத்திருந்த சமயம் அது. அப்போது தலைவரானவர் தான் கலைஞர் கருணாநிதி. கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற அவர் மேற்கொண்ட முயற்சிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. பெரியார் என்னும் ஆதவனின் பகுத்தறிவு கொள்கை சற்று தளர்த்தப்பட்டது அக்காலக்கட்டத்தில் தான்.
கருணாநிதி, எம்.ஜி.ஆர்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற புதுக்கொள்கை புகுத்தப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியும் தோன்றியது. ”நாடு பாதி... சாதி., வன்னியர் ஓட்டு .. இல்லை” என்ற சாதிய கோஷம் முழங்கப்பட்டது. சாதிய இடஒதுக்கீடு போராட்டமும் ஆங்காங்கே வழக்கமாக நடக்கும் நிகழ்வானது. கல்வி, சமூக அந்தஸ்தில் பின்தங்கியிருந்த வன்னிய மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்தனர்.
எனினும் அவர்களால் அதற்கு பின்னால் இருந்த அரசியலை காண முடியவில்லை. இப்போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் தமிழ்நாட்டில் அறங்கேறிய அரசியல் சற்று வித்தியாசமானது. ஒவ்வொரு கட்சிகளும் ஒரு சாதியை கெட்டியாக பிடித்துக் கொண்டன.
திமுக வாக்குறுதி
ஒவ்வொரு ஊரிலும் பெரும்பான்மையாக வசிக்கும் சமூக மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்தனர். அறியா மக்கள் விட்டில் பூச்சியாய் விளக்கில் விழுந்து மாண்டு போகினர். இந்த அழிச்சாட்டியம் இன்றுவரை தொடர்கிறது. அவ்வாறான ஒரு சாதிய அரசியல்தான் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிரொலிக்கிறது.
இந்த தொகுதிகளில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவு வருகிறது. பல கட்டமாக போட்டி நடந்து வந்தாலும், குறிப்பாக வன்னியர்கள் வாக்கு யாருக்கு? என்ற போட்டி உருவாகியுள்ளது. இந்த உச்சக்கட்ட மோதலுக்கு காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் அக்டோபர் 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை. அதில் திமுக ஆட்சி அமைத்த உடன் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
வன்னியர் உள்இடஒதுக்கீடு