தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காங். பட்டியலில் அதிமுக நிர்வாகி! - குழம்பிய ர.ர.க்களும் கதர்சட்டைக்காரர்களும்! - கே .பி .கே .செல்வராஜ் நாங்குநேரி

சென்னை: நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான தொகுதிப் பொறுப்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை, அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து செயல்பட்டுவரும் கே.பி.கே. செல்வராஜ் பெயரைத் தவறுதலாக தங்கள் அறிக்கையில் சேர்த்து அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

sathyamurthy bhavan

By

Published : Sep 30, 2019, 10:51 AM IST

கே.பி.கே. செல்வராஜ் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நெல்லை புறநகர் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணைச் செயலாளராக தற்போது பொறுப்பு வகித்துவருகிறார். மேலும், ராதாபுரம் தாலுகா வீட்டுவசதி சங்கத் தலைவராக அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். அதிமுக சார்பில் மாவட்டக் கூட்டுறவு இணைய இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ள அவர், கடந்த மக்களவைத் தேர்தலின்போது அதிமுக சார்பில் 33 வாக்குச் சாவடிகளுக்கு பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.

இந்தச் சூழலில் அவரைக் காங்கிரஸ் கட்சியின் தலைமை, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு தொகுதிப் பொறுப்பாளராக அறிவித்துத் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டது, செல்வராஜ் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டாரோ என அரசியல் வட்டாரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

Congress charge intimaton report
Congress charge intimaton report

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாற்று அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு, அதில் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட தேர்தல் பணிக்குழுவில், தொகுதி மேற்பார்வையாளரான கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங்கின் பெயருக்கு பதிலாக கே.பி.கே. செல்வராஜ் பெயர் மாற்றி இடம்பெற்றுவிட்டது என்று அறிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அதிமுக, காங்கிரஸ் வட்டாரங்களில் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:

அதர்மத்திற்கும், தர்மத்திற்கும் நடக்கும் தேர்தல் யுத்தம் -கே.எஸ்.அழகிரி

ABOUT THE AUTHOR

...view details