தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனாவிலிருந்து குணமடைந்தார் நல்லகண்ணு - Corona

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

By

Published : Apr 5, 2021, 8:05 AM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு (95) கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் அவரது மகள், பேரன், பேரனின் மனைவி ஆகிய மூன்று பேருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூன்று பேரும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நல்லகண்ணு கரோனா தொற்றிலிருந்து முழுவதும் குணமடைந்து நேற்று (ஏப். 4) வீடு திரும்பினார்.

ABOUT THE AUTHOR

...view details