கரோனா நிவாரண நிதி வழங்கிய நளினி
13:34 May 18
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 29 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, கரோனா நிவாரண நிதியாக தனது சிறை வைப்பு நிதியில் இருந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 5000 சிறைக் கண்காணிப்பாளர் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகியுள்ளது. கரோனா நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் நிதி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, இன்று(மே. 18) கரோனா நிவாரண நிதியாக சிறைவாசி வைப்பு நிதியில் இருந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5 ஆயிரம் ரூபாயை சிறைக் கண்காணிப்பாளர் மூலம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த மே. 15 அன்று ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன், அவரது வழக்கறிஞர் திருமுருகன் மூலம் ரூபாய் 5 ஆயிரம் கரோனா நிவாரண நிதியாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.