தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பரோலை நீட்டிக்கக்கோரி நளினி மனு; தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு - சென்னை உயர் நீதிமன்றத்தில் பரோலை நீட்டிக்க நளினி மனு

சென்னை: மகள் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியாத காரணத்தினால், பரோலை நீட்டிக்கக் கோரிய நளினியின் மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரோலை நீட்டிக்க கோரி நளினி மனு

By

Published : Aug 20, 2019, 12:25 PM IST

மகளின் திருமணத்திற்காக ஆறு மாத பரோல் கோரி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி ஜூலை 5இல் உத்தரவிட்டது.

அதன்பேரில் ஜூலை 27 முதல் ஒருமாத பரோலில் நளினி விடுவிக்கப்பட்டார். இம்மாதம் பரோல் முடிய உள்ள நிலையில் மேலும் ஒரு மாதம், அந்த பரோலை நீட்டிக்கக் கோரி ஆகஸ்ட் 8ஆம் தேதி நளினி அளித்த மனுவை 13ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு நிராகரித்து.

பரோலை நீட்டிக்கக் கோரி நளினி மனு

மகள் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக் கோரி நளினி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்ததன் பேரில், அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல் குமார் கொண்ட அமர்வு, நாளை மறுநாள் அந்த மனுவிற்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details