தமிழ்நாடு

tamil nadu

பரோல் வழக்கு: நளினியை நேரில் ஆஜர் செய்ய நீதிமன்றம் உத்தரவு

By

Published : Jun 25, 2019, 2:34 PM IST

சென்னை: மகளின் திருமணத்திற்காக ஆறு மாதம் பரோல் கேட்ட வழக்கில் நளினியை நேரில் ஆஜர் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Nalini

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்டோர் சிறையில் இருக்கின்றனர். இந்தச் சூழலில், தனது மகள் திருமணத்திற்காக ஆறு மாதம் பரோல் வழங்க வேண்டும் என நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மேலும், இந்த வழக்கில் நேரில் ஆஜராகி வாதிடவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூலை 5ஆம் தேதி பிற்பகல் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 50 காவலர்கள் பாதுகாப்புடன் நளினியை நேரில் ஆஜர் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details