பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பாக நக்கீரன் இணையத்தில் அதன் ஆசிரியர் கோபால் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதனையடுத்து கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் கோபால் ஆஜராக வேண்டுமென அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபால் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்னையில் வைத்தே கோபாலை சிபிசிஐடி விசாரிக்கவேண்டுமென உத்தரவிட்டது.
சிபிசிஐடி டிஎஸ்பி என்னை மிரட்டினார்: நக்கீரன் கோபால்
சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான செய்தியை வெளியிட்டதற்கு சிபிசிஐடி டி.எஸ்.பி என்னை மிரட்டினார் என நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கூறியுள்ளார்.
நக்கீரன் கோபால்
அதன்படி நக்கீரன் கோபால் சிபிசிஐடி முன்இன்று ஆஜரானார். அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான செய்தியை வெளியிட்டதற்கு சிபிசிஐடி டி.எஸ்.பி என்னை மிரட்டினார். விசாரணை என்ற பெயரில் என்னை குற்றவாளி போல் நடத்தினார்கள்” என்றார்.