திருவேற்காடு அடுத்த கோலடியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அதனை ஒட்டியே டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது.
அதில் முனிராஜ் (29), முனி செல்வம் (24), ஆகி இருவரும் டாஸ்மாக் பாரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு (மார்ச் 24) மது அருந்த வந்த நபர் ஒருவர் மது அருந்திவிட்டு முனிராஜ்க்கு ரூ.100-ஐ டிப்ஸ் ஆக கொடுத்து விட்டு இருவரையும் பிரித்து கொள்ளுமாறு கூறி விட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து டிப்ஸ் பணத்தில் முழுவதும் முனிராஜ் குடித்துவிட்டு முனிசெல்வத்திற்கு பணம் தராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முனி செல்வம், போதையில் வந்த முனிராஜை சரமாரியாக தாக்கியதில் அவர் கீழே விழுந்து தலையில் காயம் அடைந்தார்.
அதன் பின் போதையில் விழுந்து விட்டதாக கூறி அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது முனிராஜ் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருவேற்காடு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த திருவேற்காடு காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட முனிராஜ் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து முனி செல்வத்தை கைது செய்து, இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகின்றனர். டாஸ்மாக் பாரில் டிப்ஸ் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நண்பர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அகதிகளாய் வரும் தமிழீழ மக்கள்: என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு அரசு?