தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒரு மாத பயிற்சிக்குப் பின் 10ஆம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல் - பத்தாம் வகுப்பு

சென்னை: அவசரப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள 10 ஆம் வகுப்பு தேர்வுத் தேதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

mutharasan
mutharasan

By

Published : May 14, 2020, 2:37 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், “ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் முதல் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறைகள் இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை. தொற்று பரவல் பொதுமக்கள் மத்தியில் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 52 நாட்களாக அவர்களுக்கு வேலை, வருமானம் இழந்து குடும்ப வாழ்க்கை நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. இதில் மாணவர்கள் பள்ளியில் படித்த பாடத்தை மறுபடியும் ஒரு மீள் பார்வையிட்டு, படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு நீங்கி, இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு, ஒரு மாத காலம் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, தேர்வுக்கு அனுப்புவது தான் பொருத்தமாக இருக்கும். எனவே அவசரப்பட்டு தற்போது அறிவித்துள்ள தேர்வுத் தேதிகளை மறுபரிசீலனை செய்து, மாணவர்கள் தேர்வு எழுதும் உகந்த சூழலில் தேதிகளை மாற்றி அறிவிக்க வேண்டும் ” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகக்கூடிய சூழலே இல்லை - ஜாக்டோ ஜியோ!

ABOUT THE AUTHOR

...view details