தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
மத்திய, மாநில அரசுகள் சர்வாதிகார போக்குடன் செயல்படுகின்றன: முத்தரசன் குற்றச்சாட்டு - கனிமொழி
சென்னை: தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு.
அப்போது அவர் பேசுகையில், ”மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட காரணத்தால் தேர்தலை சீர்குலைக்க எங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு பல்வேறு இடையூறுகளை மத்திய அரசு கொடுத்து வருகிறது. சுதந்திரமாக செயல்பட வேண்டிய வருமானவரித் துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்திவருகிறது.
மேலும் தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுவருகிறது. ஆண்டிப்பட்டியில் அமமுக தேர்தல் பணிமனையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என்பது பொதுமக்களையும், அரசியல் கட்சிகளையும் அச்சுறுத்தும் நடவடிக்கையாகும். தமிழ்நாட்டிலேயே தேனி தொகுதியில்தான் அதிக பண மழை பொழிந்து வருகிறது” என்றார்.