தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அராஜகப் போக்கை அதிமுக அரசு கைவிட வேண்டும்' - முத்தரசன் காட்டம்! - முத்தரசன் ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: கோவையில் அதிமுகவின் கொடிக் கம்பம், பெண் ஒருவரின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து இது மாதிரியான அராஜகப் போக்கில் ஈடுபடுவதை அதிமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

முத்தரசன்

By

Published : Nov 12, 2019, 7:52 PM IST

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "திமுக பொதுக்குழுக் கூட்டம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. இன்றையத் தேவைக்கு ஏற்ப பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் உரையும் இன்றைய வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக சிறப்பாக இருந்தது. எனவே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்க சந்தித்து பேசினோம்.

உள்ளாட்சித் தேர்தல்:
உள்ளாட்சித் தேர்தல் குறித்து நாங்கள் தற்போது பேசவில்லை. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பிறகு, நாடாளுமன்றத் தேர்தலைப் போல திமுகவுடன் கூட்டணி அமைத்து களம் கண்டு வெற்றிபெறுவோம்.

பாபர் மசூதி விவகாரம்:
பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்துக்குப் பதில் கூற விரும்பவில்லை. தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் வேண்டும் என்பதால் மக்கள் அனைவரும் பாபர் மசூதி விவகாரத்தில் ஒரே கருத்தை தெரிவித்திருந்தனர்.

முத்தரசன் பேட்டி

கொடிக் கம்பம் விழுந்த விவகாரம்:
அதிமுகவின் கொடிக் கம்பம் விழுந்ததில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அவர் ஆபத்தான நிலையில் மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். பேனர், கொடிக் கம்பம் வைக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் ஏற்கெனவே எச்சரித்தும், தொடர்ந்து அதிமுக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதனால் அதிமுக அரசு இத்தகைய அராஜகப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும்" என வலியுறுத்தினார்.

மேலும் படிக்க: அதிமுகவால் மீண்டும் ஒரு விபத்து... இந்த முறை பேனர் இல்லை கொடிக் கம்பம்!

ABOUT THE AUTHOR

...view details