தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இஸ்லாமிய பெண்களை கொச்சைப்படுத்தி பதிவு - பாஜகவினர் மீது புகார்! - இஸ்லாமிய பெண்கள்

சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடும் இஸ்லாமிய பெண்களை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

complaint
complaint

By

Published : Feb 21, 2020, 7:45 PM IST

இது குறித்து காவல் ஆணையரக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் முஸ்தபா, ” குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் இஸ்லாமிய மாணவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமிய பெண்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய பெண்களை, பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அமைப்பினர் சிலர் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தச் செயல் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையிலும், கொச்சைப்படுத்தும் நோக்கத்திலும் இருக்கிறது. இது போன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடுதல் காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளோம் “ என தெரிவித்தார்.

இஸ்லாமிய பெண்களை கொச்சைப்படுத்தி பதிவு - பாஜகவினர் மீது புகார்!

இதையும் படிங்க: ஜெயலலிதா இருந்திருந்தால் இம்மாதிரியான போராட்டங்கள் நடந்திருக்குமா? - பிருந்தா காரத்

ABOUT THE AUTHOR

...view details